பிரதான செயற்பாடுகள்

சபைச் செயலகம்

சபரகமுவ மாகாண சபை

 

பிரதான செயற்பாடுகள்

  • மாகாண சபை கூட்டங்களை ஒழுங்கமைத்தல், கூட்டங்களில் சபையினுள் இடம்பெறும் விவாதங்கள் மற்றும் கூட்டம் தொடர்பான சகல நடவடிக்கைகளையும் ஹன்சாட் அறிக்கை மூலம் ஆவணப்படுத்தல்.
  • குழுக் கூட்டங்களை ஏற்பாடு செய்தல், அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் பொருத்தமான பிரிவுகளுக்கு வழங்குதல்.
  • கணக்குகள் குழு
    பொதுமக்களின் மனுக்கள் குழு
    அலுவல்கள் குழு
    அமைச்சின் ஆலோசனை குழு
  • கணக்குகள் குழுவின் கூட்டங்களை ஏற்பாடு செய்தல், அறிக்கை இடல் மற்றும் வருடாந்த கணக்குகள் குழு அறிக்கையினை சபையில் இடல்.
  • கிடைக்கப்பெறும் பொது மக்களின் மனுக்கள் தொடர்பாக அறிக்கைனை வேண்டுதல், மனுக்களுக்கான குழுக் கூட்டங்களை ஏற்பாடு செய்தல், மனுக்களை விசாரணை செய்தல் மற்றும் உரிய கட்சினருக்கு தீர்வினை அறிவித்தல்.
  • சட்டங்களை சபையில் நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் பிரத்தியேக ஊழியர்களினை நியமித்தல், சேவையினை முடிவுறுத்தல், ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு செய்வதற்கான அலுவலக நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • நிறைவு செய்யப்பட்ட சபை அறிக்கைகள் மற்றும் ஹன்சாட் அறிக்கைகள் சரியான நேரத்திற்குள் தயாரித்தல் மற்றும் கௌரவ மாகாண சபை உறுப்பினர்கள், கௌரவ ஆளுநர் அவர்கள், சபைச் செயலாளர், பிரதான செயலாளர் மற்றும் பிரதிப் பிரதான செயலாளர்கள், மாகாண அமைச்சின் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் ஏனைய மாகாண சபைகளுக்கு விநியோகித்தல்.
  • மாகாண சபைக் கூட்டங்களை ஆடியோ, காணொளி ஊடகங்களில் பதிவு செய்து தொகுத்து வழங்குதல்.
  • சபை அறிக்கைகள், விவாத அறிக்கைகள் தயாரித்து அவசியமான சந்தர்ப்பங்களில் விநியோகித்தல்.
  • சபைச் செயலக அலுவலர்கள், மாகாண சபையின் அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரத்தியேக ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளடங்களாக அனைத்து கொடுப்பனவுகளையும் செலுத்தல்.
  • மாகாண நிதி விதிகளுக்கு அமைய கணக்கு வைத்தல் மற்றும் அறிக்கைகளை உரிய திகதிக்கு முன்னர் உரிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தல்.
  • அலுவலகத்தில் ஒழுக்கம் மற்றும் சாதாரண நிர்வாக நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல்.
  • சபைச் செயலக அலுவலர்களுக்கு அவசியமான மனிதவள அபிவிருத்தியினை மேற்கொள்ளல்.
  • வருடாந்த மதிப்பீடுகளைத் தயாரித்தல்.
  • வருடாந்த ஒதுக்கீட்டு கணக்குகள் மற்றும் முற்பணக் கணக்குகளைத் தயாரித்தல்.
  • ஆவண பாதுகாப்பு மற்றும் நூலகத்தினை நடத்திச் செல்லல்.
  • கணக்காய்வு அறிக்கை வினவல்களுக்கு பதிலளித்தல்.